செய்திகள்
ஸ்டெதஸ்கோப்

வடமதுரை அருகே கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்கள்

Published On 2020-02-18 09:07 GMT   |   Update On 2020-02-18 09:07 GMT
வடமதுரை அருகே கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதியை சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் விவசாய தொழிலாளர்கள், மில் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இப்பகுதி உள்ளது.

காலையில் பணிக்கு சென்றால் இரவில் வீடு திரும்புவது, தினசரி சொந்த வேலைகளை கவனிப்பது ஆகியவற்றிலேயே இவர்களது பணி முடிந்து விடுகிறது. ஏதேனும் சிறிய நோய் வந்தால்கூட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரும்பாலும் காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் ஊசி போடுவது கிடையாது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும், மருந்து கடைகளிலும் ஊசி போடுவது, வீரியம் மிகுந்த மருந்து மாத்திரைகளை வழங்குவதால் உடனடியாக நோய் குணமாகி விடுகிறது.

இதனால் எம்.பி.பி.எஸ். முடிக்காத பலர் கிராமங்களுக்கு சென்று மருந்து மாத்திரைகள் கொடுத்தும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கிளினிக்கில் சென்று சிகிச்சை பெறும்போது கூடுதல் நேரம், அலைச்சல் ஏற்படுவதோடு செலவும் அதிகமாகிறது. ஆனால் வீடு தேடி வரும் இதுபோல போலி டாக்டர்கள் அளிக்கும் மருந்து மாத்திரைகள் பல சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News