செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டோர்மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - முதல்வர் பழனிசாமி

Published On 2020-02-08 10:47 GMT   |   Update On 2020-02-08 10:47 GMT
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டோர்மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.
கோவை:

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாகர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கு தலைவாசலில் நாளை அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

வயது முதிர்வு காரணமாக கீழே குனிய முடியாததால் சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனே கூறியுள்ளார்; வருத்தமும் தெரிவித்துவிட்டார், இதை பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கிறது.

நடப்பாண்டில் நல்ல மழை பெய்து உள்ளதால் தமிழகத்தில் வறட்சி என்பதே இல்லை.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆன்மீகவாதி என எனக்கு நன்கு தெரியும். அவர் கூறிய கருத்துக்கள் அ.தி.மு.க.வின் கருத்துக்கள் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News