செய்திகள்
பொங்கல் விழா பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஜிகே வாசன் சான்றிதழ் வழங்கினார்

தமிழர் சபை சார்பில் சமத்துவ பொங்கல் விழா - ஜி.கே.வாசன் பங்கேற்பு

Published On 2020-01-06 09:25 GMT   |   Update On 2020-01-06 09:25 GMT
சேப்பாக்கத்தில் தமிழர் சபை சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது. விழாவில் சமத்துவ பொங்கல் பானை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.
சென்னை:

தமிழர் சபை சார்பில் ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் சமத்துவ பொங்கல் விழாவும் சேப்பாக்கத்தில் இன்று நடந்தது.

விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கல்வி உரிமைகள் கழக தலைவர் தேவநாதன் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 1 லட்சம் ரொக்கப் பரிசுகள், விருதுகள் மற்றும் சான்றிதழ்களை ஜி.கே.வாசன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் பானை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது. இதில் அனைத்து சமுதாய பெரியோர்களும் கலந்து கொண்டனர். பின்னர் விருது பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் திருநாளை சமத்துவ உணர்வோடு எல்லோரும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் த.மா.கா. நிர்வாகிகள் முனைவர் பாட்ஷா, ரவிபாரதி, டி.என். அசோகன், அண்ணாநகர் ராம்குமார், கே.ஆர். டி. ரமேஷ் துறைமுகம் செல்வகுமார், மால்மருகன் மற்றும் தமிழர் சபை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தமிழர் சபை நிறுவன தலைவர் ராஜன் எம்.பி. நாதன் செய்திருந்தார்.

Tags:    

Similar News