செய்திகள்
வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - 6 மணி முன்னிலை நிலவரம்

Published On 2020-01-02 12:57 GMT   |   Update On 2020-01-02 12:57 GMT
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த 6 மணி முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.
சென்னை

தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆரம்பம் முதலே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. 

இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி வெளியான முன்னிலை நிலவரம் வருமாறு:

மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 122 இடங்களிலும், திமுக 143 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இதேபோல், மொத்தமுள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 551 இடங்களிலும், திமுக 713 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவர்கள் 47 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News