செய்திகள்
கோப்பு படம்

திருவாரூர் அருகே தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி தி.மு.க.வினர் சாலைமறியல்

Published On 2020-01-01 10:51 GMT   |   Update On 2020-01-01 10:51 GMT
திருவாரூர் அருகே முகந்தனூரில் தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி திமுகவினர் சாலைமறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூர் அருகே முகந்தனூரில் தபால் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த தேர்தல் அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதபோல் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு தபால் வாக்குகள் கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முகந்தனூர் தபால் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த வாக்குகளை தற்காலிக போஸ்ட் மாஸ்டர் தேர்தலில் போட்டியிடும் தனது உறவினர்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தபால் வாக்குகளை முகந்தனூர் போஸ்ட் மாஸ்டர் முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி முந்தனூர் மெயின்ரோட்டில் தி.மு.க.வினர் அக்கட்சியை சேர்ந்த பிரபு என்பவர் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த சாலை மறியலால் திருவாரூர் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News