செய்திகள்
கைது

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

Published On 2019-12-28 12:20 GMT   |   Update On 2019-12-28 12:20 GMT
குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதையடுத்து மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில இடங்களில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் தலைமையிலான போலீசார் பாலப் பள்ளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த லாரன்ஸ் (வயது 60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தக்கலை சப்-இன்ஸ்பெக் டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அழகியமண்டபம் பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த லிபின் (வயது 24) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசார் கட்டிமாங்கோடு பகுதியில் ரோந்து சென்ற போது அனுமதியின்றி மது விற்ற பாலமுருகன் என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 21 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கொல்லங்கோடு, சூரிய கோடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ஜான்சன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News