செய்திகள்
விபத்து

கயத்தாறில் பாலத்தில் கார் மோதி பெண் பலி

Published On 2019-12-23 11:17 GMT   |   Update On 2019-12-23 11:17 GMT
கயத்தாறில் பாலத்தில் கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கயத்தாறு:

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கண்ணன் நாயர். இவரது மகள்கள் சசிரேகா நாயர் (வயது53), சிந்து (45).சசிரேகா நாயருக்கு திருமண மாகவில்லை. அவரது தங்கை சிந்துவுக்கு மதுரை அய்யனார் குளத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருடன் திருமணம் ஆகி மதுரையில் வசித்து வருகிறார்கள். சசி ரேகாவும், கண்ணன் நாயரும் கடந்த சில வருடங்களாக கோவையில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிந்து மதுரையில் புதிதாக ஒரு கம்பெனியை திறக்க உள்ளார். இதற்காக திருச் செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடிவு செய்தனர். இதனால் கோவையில் உள்ள தனது அக்கா சசிரேகா நாயரை மதுரைக்கு அழைத்துள்ளனர். பின்பு அங்கிருந்து சசிரேகா நாயர், சுரேஷ்குமார், சிந்து ஆகிய 3 பேரும் ஒரு காரில் திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றனர். காரை சுரேஷ் குமார் ஓட்டி வந்தார்.

நேற்று மாலை சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பினர். கார் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சசிரேகா நாயர் படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே சசிரேகா நாயர் பரிதாபமாக இறந்தார்.

மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது நிகழ்ந்த இந்த கோர விபத்து அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News