செய்திகள்
மழை

உடன்குடி வட்டார பகுதியில் மழை

Published On 2019-12-20 05:57 GMT   |   Update On 2019-12-20 05:57 GMT
உடன்குடி வட்டார பகுதிக்குட்பட்ட பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, தண்டுபத்து, மெய்யூர், உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

உடன்குடி:

வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும், வடகிழக்கு பருவமழை காலம் என்பதாலும் தமிழகம் முழுவதும் மழை பரவலாக பெய்து வந்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விட அதிக அளவில் பெய்துள்ளது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் தற்போது முடிந்து விட்டது. ஆனாலும் தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்தது. உடன்குடி வட்டார பகுதிக்குட்பட்ட பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, தண்டுபத்து, சீர்காட்சி, பிச்சுவிளை, செட்டியாபத்து, மெய்யூர், உதிரமாடன் குடியிருப்பு, பெரியபுரம், சிறுநாடார் குடியிருப்பு, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமானோர் மழையில் நனைந்தபடி சென்றனர். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால் முக்கியமான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி வழியாக செல்ல பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News