செய்திகள்
லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

தொப்பூரில் கார் மீது லாரி மோதி விபத்து: டிரைவர்- கிளீனர் காயம்

Published On 2019-12-16 14:00 GMT   |   Update On 2019-12-16 14:02 GMT
தொப்பூரில் கார் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர்- கிளீனர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இண்டூர்:

கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்துள்ள பையூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் சங்ககிரியை சேர்ந்த தண்டபாணி (45) என்பவர் கிளீனராக லாரியில் இருந்தார். இந்த நேற்று நள்ளிரவு லாரி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வந்த போது முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் நிலை தடுமாறிய கார் மற்றும் லாரி இரண்டுமே சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முருகேசன் மற்றும் கிளீனர் தண்டபாணி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்கள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முருகேசன் மற்றும் தண்டபாணி ஆகியோரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையடுத்து போலீசார் சாலையில் கவிழ்ந்த லாரி மற்றும் காரை அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அந்தப் பகுதியில் உள்ள சாலையின் ஒரு பகுதியை மட்டுமே போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக தொப்பூர் பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் ஊர்ந்து சென்றன. இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News