செய்திகள்
பெண் உயிரிழப்பு

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் உயிரிழப்பு

Published On 2019-12-13 11:56 GMT   |   Update On 2019-12-13 11:56 GMT
செய்யாறு அருகே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் திடீரென இறந்து போனார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள புளியம்பாக்கம் காலனியை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி வினித்ரா (வயது21). 2-வதாக கர்ப்பம் தரித்தார்.

பிரசவவலி ஏற்பட்டதால் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேசன் மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடர்ந்து வினித்ராவுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவர் திடீரென இறந்து விட்டார்.

இதனால் அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக அவர்கள் கூறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. செய்யாறு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News