செய்திகள்
கருணாஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் சந்திப்பு

Published On 2019-12-12 08:38 GMT   |   Update On 2019-12-12 09:42 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.
சென்னை:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.

வேட்பு தாக்கல் செய்ய இன்னும் 3நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.

அப்போது உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News