செய்திகள்
கோப்பு படம்

பவானி ஆற்றுப்பால தடுப்பில் ஏறி செல்பி எடுத்த வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து பலி

Published On 2019-12-11 11:02 GMT   |   Update On 2019-12-11 11:02 GMT
பவானி ஆற்றுப்பாலத்தில் ஏறி செல்பி எடுத்த வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்:

கோவை பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் பாலமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (30). இவர் தனது நண்பருடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தார்.

பின்னர் இளங்கோ தனது நண்பருடன் நெல்லித்துறை பவானி ஆற்றுப்பாலத்தின் நடைமேடையை ஒட்டி உள்ள தடுப்பின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பவானி ஆற்றில் தவறி விழுந்தார். ஆற்றில் வெள்ளபெருக்கு அதிகரித்து காணப்பட்டதால் இளங்கோ தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சென்ன கேசவன் மற்றும் போலீசார் , தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பரிசல் காரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளங்கோ உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று மாலை வரை அவரது உடல் கிடைக்கவில்லை. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. செல்பி எடுத்த போது ஆற்றில் வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News