செய்திகள்
மழை

தொண்டி பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-11-29 13:44 GMT   |   Update On 2019-11-29 13:44 GMT
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பகுதியில் ஆர்.எஸ்.மங்களம் தாலுகாவும் சேர்ந்திருந்த போது சுமார் 42 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயப் பணிகள் நடை பெற்று வருகிறது. 

தற்போது கனமழை பெய்யாவிட்டாலும் விட்டு விட்டு பெய்யும் லேசான மழை சிறு துளி பெரு வெள்ளம் போல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் நெற்பயிர் பயிரிடப்படுகிறது. போதிய மழை இல்லாவிட்டால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் அடிக்கடி விவசாயிகளிடையே தகராறு ஏற்பட்டது. 

தற்போது பெய்துள்ள மழையால் விவசாயிகளிடையே ஏற்படும் பிரச்சினை குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் விவசாயம் இல்லாத பகுதிகளில் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சும் கருவேல செடிகள் செழிப்பாக வளர்கிறது. இதனால் மழை இல்லாத போது பயிர்களுக்கு தேவையான நிலத்தடி நீர் கருவேல மரங்களால் உறிஞ்சப்பட்டு விரைவாக வற்றிவிடுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தை  கருவேலமரம் செடி இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News