செய்திகள்
காங்கிரஸ்

மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து காங்கிரஸ் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்

Published On 2019-11-25 14:55 GMT   |   Update On 2019-11-25 14:55 GMT
மத்திய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு, பொருளாதார சீர்குலைவு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

மத்திய பா.ஜனதா அரசின் பணமதிப்பிழப்பு, பொருளாதார சீர்குலைவு, மாநில உரிமைகள் பறிப்பு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வரும் 30-ந் தேதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படவுள்ளது. 

இந்நிலையில் இன்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது. கடற்கரை சாலை குபேர் சிலை அருகில் புறப்பட்ட ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். ஊர்வலம் செஞ்சிசாலை, புஸ்சிவீதி, அண்ணாசாலை, ராஜாதி யேட்டர், நேருவீதி, காந்திவீதி, அஜந்தா சிக்னல், ஆனந்தா இன், காமராஜர்சிலை, நெல்லித் தோப்பு, இந்திராகாந்தி சிலை வழியாக ராஜீவ்காந்தி சிலையை அடைந்தது. 

அங்கு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலகண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ், பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, செயலா ளர் சாம்ராஜ், காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், ஐ.என்.டி.யூ.சி முத்துராமன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரகுபதி, மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் சங்கர், இளையராஜா, துணைத்தலைவர் சரவணன், மனித உரிமை பிரிவு தலைவர் சிபி, காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர்கள் ஜனார்த்தனன், செந்தில் குமரன், ராகுல்காந்தி பேரவை சேகர், கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News