செய்திகள்
விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தல் - விஜயகாந்த் ஆலோசனை

Published On 2019-11-18 10:02 GMT   |   Update On 2019-11-18 10:02 GMT
உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குழு மற்றும் 39 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போரூர்:

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து தே.மு.தி.க. போட்டியிட உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எல்.கே.சுதிஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை விஜயகாந்த் அறிவித்தார்.

இதேபோல் மாவட்ட வாரியாக 39 பொறுப்பாளர்களையும் நியமனம் செய்து அறிவித்தார். இந்த நிலையில் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விஜயகாந்த் வந்தார்.

தொகுதி பங்கீடு குழு மற்றும் 39 மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் அ.தி.மு.க.விடம் இருந்து தே.மு.தி.க.விற்கு எத்தனை மாநகராட்சி மேயர், வார்டு கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை கேட்டு பெறுவது, தே.மு.தி.க.விற்கு சாதகமான இடங்கள் எவை? வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார்.

அவைத்தலைவர் டாக்டர். இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி, அக்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News