செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது

Published On 2019-11-14 14:27 GMT   |   Update On 2019-11-14 14:27 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. கடந்த 11-ந் தேதி 24 ஆயிரத்து 21 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 16 ஆயிரத்து 678 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

அணையில் இருந்து நேற்று 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 600 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

Tags:    

Similar News