செய்திகள்
போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்.

மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் குவிந்து கிடக்கும் வாகனங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம்

Published On 2019-11-04 15:09 GMT   |   Update On 2019-11-04 15:09 GMT
மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் விபத்து வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதை சுற்றியுள்ள பகுதியில் புதர்மட்டி கிடப்பதால் அதிக அளவிலான கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்ட அள்ளி காவல் நிலையத்தில் விபத்து வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் வளாக சுற்றுப்பகுதியில் புதர்மட்டி கிடப்பதால் அதிக அளவிலான கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. 

மாரண்டஅள்ளி பகுதியில் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மர்மகாய்ச்சல், வாந்தி, பேதி மற்றும் சிக்கன்குன்னிய, மலேரியா, டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தகையவாறு வாகனங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பொதுமக்களை வருத்தம் அடைய வைக்கிறது.

எனவே, காவல் நிலையத்தில் உள்ள பழைய டயர், விபத்து வாகனம் போன்றவற்றை அப்புறப்படுத்தி கொசுக்கல் உற்பத்தியாகாத வண்ணம் தூய்மையாக வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News