செய்திகள்
விஜயபாஸ்கர்

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்டு விடலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-10-25 15:41 GMT   |   Update On 2019-10-25 15:41 GMT
மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை இன்னும் 2 மணி நேரத்தில் மீட்டுவிடலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் கூறியதாவது:

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை இன்னும் 2 மணி நேரத்தில் மீட்டுவிடலாம். குழந்தையின் அழுகை சத்தம் கேட்பதாகவும், அசைவு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவ இடத்தில் மருத்துவ குழுக்கள், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது. இரவு ஆனாலும் மீட்பு பணி தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News