search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீயணைப்பு வீரர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லைஸ்பர்க் பார்க்கின் விரிவாக்கமாக ஓஷியானா பார்க் உருவாகியது
    • காணாமல் போன ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

    வட ஐரோப்பாவில் உள்ள நாடு, ஸ்வீடன். இதன் தலைநகரம் ஸ்டாக்ஹோம் (Stockholm).

    ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோர நகரம், கோதன்பர்க் (Gothenburg).

    இந்நகரில் "ஓஷியானா வாட்டர் பார்க்" (Oceana water park) எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. "லைஸ்பர்க் அம்யூஸ்மென்ட் பார்க்" (Liseberg Amusement Park) எனும் பொழுதுபோக்கு பூங்காவின் விரிவாக்கமாக இது உருவாகி வந்தது.

    நேற்று, ஓஷியானா தண்ணீர் பூங்காவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமானம் முடிந்து, பயன்பாட்டிற்கு இன்னும் வராத பல நீர்சறுக்கு அமைப்புகள் தீக்கிரையாகின.


    அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் புகை சூழ்ந்தது.

    இந்த தீ விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனாலும், ஒருவர் காணவில்லை என்றும் அவரை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.


    தண்ணீர் பூங்காவை சுற்றியுள்ள ஒரு ஓட்டல் மற்றும் அருகிலிருந்த அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மேலும், தீ முழுவதுமாக அணைக்கும் வரை தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களையும் கதவுகளையும் தாழிட்டு கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

    அப்பகுதி முழுவதும் எரிந்த பிளாஸ்டிக் வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • எல்லோரையும் போல் முதியவர் பாக்கெட்டை விரல்களால் திறக்க முயன்றார்
    • தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் பராமரிப்பு பணியாளர்கள் செயல்பட்டனர்

    அமெரிக்காவின் தென்மேற்கில் உள்ளது ஜியார்ஜியா (Georgia) மாநிலம். இங்குள்ள நகரம், டால்டன் (Dalton).

    இங்கு வசித்து வந்த 75 வயது முதியவர் ஒருவர், உண்பதற்காக ஒரு சிப்ஸ் பாக்கெட்டை வாங்கினார். ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர், எல்லோரையும் போல் அந்த பாக்கெட்டை தனது விரல்களால் திறக்க முயன்றார்.

    ஆனால், அவரால் அந்த பாக்கெட்டை திறக்க முடியவில்லை.

    சிறிது நேரம் போராடி பார்த்து பொறுமையிழந்த அவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடியே தன்னிடம் இருந்த சிகரெட் லைட்டரை எடுத்து, அந்த பாக்கெட் ஓரத்தில் தீயை காட்டினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் உடலில் தீ பற்றி, மளமளவென அவரது உடல் எரிய தொடங்கியது.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த பராமரிப்பு பணியாளர்கள் சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரும் வரையில் காத்திருக்காமல், பராமரிப்பு பணியாளர்கள், ஒரு பெரிய நீர் குழாய் வழியாக, எரிந்து கொண்டிருந்த அந்த முதியவர் மீது நீரை பாய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதற்குள் தீயணைப்பு வீரர்களும், மருத்துவ அவசர சேவை பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர்.

    தொடர்ந்து, டென்னிசி மாநில சட்டனூகா (Chattanooga) பகுதியில் உள்ள எர்லாங்கர் பேரோனெஸ் மருத்துவமனையில் (Erlanger Baroness Hospital) அவர் சேர்க்கப்பட்டார்.

    தீ விபத்து காரணமாக அந்த முதியவருக்கு உடலில் 75 சதவீத காயங்கள் ஏற்பட்டிருப்பதாக, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மட்டுமே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

    சிப்ஸ் பாக்கெட்டில் தீ பற்றி, அது அவர் மேல் பரவியதா அல்லது அவர் தன் உடல் மேல் கவனக்குறைவாக தீ வைத்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    ஆனால், சிப்ஸ் தயாரிப்பில் எண்ணெய் மற்றும் மாவு பயன்படுத்தப்படுவதால், அவை தீப்பற்ற கூடிய பொருட்கள்தான் என உணவு பொருள் தயாரிப்பு வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • மனமுடைந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார்.
    • பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்டது நாகொண்டன ஹள்ளி. இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 37 வயதான ஒரு இளம் பெண் தனது கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவருக்கும் அவரது கணவரின் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து மனமுடைந்த அந்த பெண் தனது 5 வயது குழந்தையுடன் ஒரு அறைக்குள் சென்று சமையல் கியாசை திறந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரம் கதவைதட்டியும் அந்த இளம்பெண் கதவை திறக்கவில்லை.

    உடனடியாக குடும்பத்தி னர் ஒயிட் பீல்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் தீயணைப்பு துறையினரும் அந்த பெண்ணை கதவை திறக்க சொன்னார்கள். ஆனால் அவர் திறக்க மறுத்தார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கட்டையால் கதவை உடைத்து அறைக்குள் சென்று தீப்பெட்டியுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணையும் 5 வயது குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் கியாஸ் கசிவையும் சரி செய்தனர். இது குறித்து பெங்களூரு ஒயிட் பீல்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.
    • மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மாரட் பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலா ஷியம்மா(வயது79). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த மகனின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால், வயதான காலத்திலும் வேலைக்கு சென்று வந்தார்.

    கமலாஷியம்மா வீட்டுக்கு வரும் வழியில் சில நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள் குப்பைகளை அதிகளவில் கொட்டிவிட்டனர். அதில் புற்கள் அதிகளவில் வளர்ந்திருந்ததால், அது தான் வழி என்று குறுக்கு வழியில் நடந்துசெனறார். இதனால் அவர் அங்கிருந்த சகதியில் சிக்கிக்கொண்டார்.

    அதிலிருந்து வெளியேற போராடியிருக்கிறார். ஆனால் அந்த சகதியிலேயே தவறி விழுந்துவிட்டார். இதனால் அவரால் எழுந்து வர முடியவில்லை. தன்னை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டிருக்கிறார். ஆனால் அவரது சத்தம் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்கவில்லை.

    இதனால் பல மணி நேரமாக சகதியில் சிக்கிய நிலையில் போராடியபடி இருந்திருக்கிறார். இந்த நிலையில் கமலாஷியம்மாவின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர், துவைத்து காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக தனது வீட்டின் மாடிக்கு வந்திருக்கிறார்.

    அப்போது மூதாட்டி கமலாஷியம்மா சகதியில் சிக்கி கிடப்பதை பார்த்தார். அதுபற்றி திருப்புவண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வினு ராஜ், உதவி அலுவலர் சந்தோஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்கள் கயிறு மற்றும் பிற உபகரணங்களை பயன்படுத்தி மூதாட்டி கமலாஷியம்மாவை போராடி மீட்டனர். பின்பு அவரை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் தூக்கி வந்தனர். பின்பு மூதாட்டி மீதிருந்த சகதியை தண்ணீரை ஊற்றி கழுவினர்.

    பின்பு மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சகதியில் சிக்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    • தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். குடோனில் உள்ளே இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியவை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீயிலிருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண்ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தண்ணீர், தீயணைப்பான் திரவம் போன்றவர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து ரசாயன புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    • சம்பத்குமாருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது.
    • இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    அண்ணா கிராமம் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.இந்த தீ மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பவரது கரும்பு தோட்டத்திற்கும் பரவியது. இதனால் அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலை அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும்
    • ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.

    களியக்காவிளை :

    வடகிழக்கு பருவமழை காலங்களில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். இந்த வெள்ளப் பெருக்கின் போது, பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்து உயிர் பலி ஏற்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இருந்து பொதுமக்கள் தங்களை எப்படி காப்பாற்றுவது? என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி குழித்துறை தீயணைப்பு துறை சார்பில் இன்று நடந்தது. நிலைய அலுவலர் சந்திரன் தலைமையில் வீரர்கள் தத்ரூபமாக இதனை செய்து காட்டினர்.

    வெள்ளப் பெருக்கின் போது, பொது மக்கள் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி மிதந்து தப்பிப்பது, கால்நடைகள் ஆற்று வெள்ளத்தில் தவறி விழுந்தால் எப்படி காப்பாற்றி கரை சேர்ப்பது? போன்ற ஒத்திகை பயிற்சிகள் தீயணைப்பு துறை சார்பில் நடை பெற்றது. பிளாஸ்டிக் கேன்கள், வாழைத் தண்டுகள், ரப்பர் டியூபுகள் பயன்படுத்தி தானாக எப்படி காப்பாற்றி கொள்வது போன்ற ஒத்திகை பயிற்சிகள் நடைபெற்றது.

    • தீயணைப்பு வீரர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஆளப்பெரியானூர் கிராமத்தில் வசித்து வரும் தென்னரசு என்பவரின் வீட்டில் பாம்பு புகுந்தது.

    அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உடனடி யாக நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ½ மணி நேரம் போராடி சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்தனர்.

    இதேபோல நாட்டறம்ப ள்ளி அருகே சோமநா யக்கன்பட்டி பகுதியில் உள்ள ஜெர்ரா வட்டத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவரின் வீட்டில் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை பிடித்தனர். நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் 2 பாம்புக ளையும் வனத்துறை மூலம் காப்பு காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் அடிக்கடி வீடுகளில் பாம்புகள் நுழை வதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
    • பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூர் சந்திப்பு பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் கசிந்து கீழே கொட்டிக் கொண்டிருந்தது. இதற்கிடையில் அந்த மின்சார டிரான்ஸ்பார்ம ரின் அடிப்பகுதியில் திடீரென தீ பிடித்தது.அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது.இதனால் தீ மளமளவென்று பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. தீயணைக்கும் படை வீரர்கள் தீயை உடனே அணைத்ததால் அந்த பகுதியில் இருந்த ஓட்டல் கடைகள் மற்றும் வீடுகள் தீவிபத்தில் இருந்து தப்பின.

    • தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர்
    • 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடத்தின் தரை தளத்தில் சமையல் பொடி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. முதல் மற்றும் 2-வது மாடிகளில் கடைகள் எதுவும் இல்லாததால் காலியாக இருந்தது.

    இந்த நிலையில் கட்டிடத்தின் 2-வது மாடியில் இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள பொருட்கள் தீயில் எரிந்து குபு...குபு...வென புகை வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமார், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய உதவி அதிகாரி துரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தரைத்தளத்தில் செயல்பட்டு வந்த கடையை உடனடியாக அடைத்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன.

    அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லாதபடி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் யாரும் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீ விபத்து காரணமாக அசம்பு ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    அசம்பு ரோட்டில் 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர். 

    • 3-வது நாளாக கடும் போராட்டம்
    • நாளைக்குள் தீயை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

    நேற்று முன்தினம் மாலையில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது.

    இன்று 3-வது நாளாகவும் தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில், கன்னியா குமரி, குலசேகரம், திங்கள் நகர், தக்கலை, குளச்சல் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவு புகை வந்து கொண்டே இருப்ப தால் அந்த பகுதி மக்கள் கடும் ஆளாகி உள்ளனர்.

    காற்று தென்கிழக்கு திசையில் வீசி வருவதால் குப்பை கிடங்கில் இருந்து வரும் புகை தென்கிழக்கு திசைக்கு செல்கிறது.

    சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலங் கள் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். நாளைக்குள் தீயை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    ×