என் மலர்
நீங்கள் தேடியது "கயிற்றைக் கட்டி உடலை மீட்டனர் Firefighters tied a rope and recovered the body"
- கணேசன், திடீரென மாயமானார்
- அவரது செருப்பு கிணற்றில் மிதந்தது
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த விட்டமநாயக்கன்பட்டி ஊராட்சி ராசா கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). காங்கிரஸ் பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற கணேசன், திடீரென மாய மானார். இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடினர். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே அவரது மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. மேலும் அவரது செருப்பு கிணற்றில் மிதந்தது. அதிர்ச்சி அடைந்து உறவினர்கள், கிணற்றில் பார்த்தபோது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உறவினர்கள் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கயிற்றைக் கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி கணேசனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் விசாரணை நடத்தியதில், கோவிலுக்கு வரி கொடுத்துவிட்டு தோட்டத்திற்கு சென்று அவர் தவறி கிணற்றில் விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






