என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுதொண்டமாதேவியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ள காட்சி.
பண்ருட்டி அருகே தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
- இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
- காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி நடுத்தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது 60). இவரது கூரை வீடு மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மேலும் பரவி அருகில் இருந்த மனவளப் பெருமாள்வீடும் எரிந்து சாம்பலானது. இந்த தீ வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
இது பற்றி தகவல் பண்ருட்டி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






