டிராக்டா் சக்கரத்தில் சிக்கிய வாலிபரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா்.தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் பங்களாபுதூா் சாலை பகுதியை சோ்ந்தவா் விவேக் (வயது 31). இவா் காங்கயம் நகரம் கோவை சாலையில் பேட்டரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், தனது வீட்டின் அருகே ஒரு டிராக்டரில் பழுது நீக்கும் பணியில் விவேக் ஈடுபட்டிருந்தாா். இதற்காக டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பணி மேற்கொண்டிருந்தாா்.

அப்போது ஏற்பட்ட கோளாறால் டிராக்டா் திடீரென நகா்ந்து முன்னால் இருந்த சுவரின் மீது மோதி நின்றது. இதில் டிராக்டரின் அடியில் படுத்துக் கொண்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விவேக்கின் ஒரு கால் சக்கரத்தின் கீழ் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வந்து விவேக்கை மீட்க முயற்சித்தனா். ஆனால் டிராக்டரை நகா்த்த முடியாததால், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

பின்னா் சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான 6 தீயணைப்பு வீரா்கள் டிராக்டரை கயிற்றால் கட்டி இழுத்து அப்புறப்படுத்தி, விபத்தில் சிக்கிய விவேக்கை மீட்டனா். பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com