செய்திகள்
மோசமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

தஞ்சையில் மழையால் சேதமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

Published On 2019-10-23 10:11 GMT   |   Update On 2019-10-23 10:11 GMT
தஞ்சையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக ரோடுகள் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதை சரி செய்ய கோரி பெண்கள் நாற்று நட்டு போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர், தொண்டைமான் நகர் உள்ளிட்ட பல நகர்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்ளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதற்காக தார் சாலை நடுவே பள்ளம் தோண்டிக் குழாய் பதிக்கப்பட்டது. இதில் சில இடங்களில் பள்ளம் அப்படியே உள்ளது. மேலும் பணிகள் முடிந்தாலும் தார் சாலை அமைக்கப்பட வில்லை. மண் குவியலாக உள்ளது.

தஞ்சையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த மண் குவியல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. ஆனால் அந்த வழியாக நடந்து செல்லவே பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சென்று வருகின்றனர். பள்ளத்தை சரியாக மூடி தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை அந்த பணி நிறைவேற வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை பாண்டியன் நகரில் திரண்டனர். பின்னர் அவர்கள் சேரும் சகதியுமாக காட்சி அளித்த சாலையில் இறங்கி நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது பாதாள சாக்கடை பணியை முடித்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.

Tags:    

Similar News