செய்திகள்
வெள்ளம் சூழ்ந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டனர்.

குமரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்

Published On 2019-10-21 10:27 GMT   |   Update On 2019-10-21 10:27 GMT
குமரி மாவட்டம் முழுவதும் விடிய, விடிய கனமழை பெய்ததால் 100 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. புத்தேரி, புளியடி, சுசீந்திரம், தக்கலை, திருவட்டார், விளவங்கோடு, கல்குளம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜாக்கமங்கலம் அண்ணா காலனி, மேல சங்கரன்குழி பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. நாகர்கோவில் பறக்கின்கால் மடத்தெருவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதே போல தோவாளை, திருவட்டார் உள்பட பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மழை வெள்ளம் சாலைகளில் ஓடுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News