செய்திகள்
தற்கொலை

கோவையில் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-10-15 10:51 GMT   |   Update On 2019-10-15 10:51 GMT
கோவையில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:

கோவை அம்மன்குளம் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முருகன் என்ற பாக்யராஜ் (வயது 37). கோவை மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர். இவரது மனைவி பூங்கொடி (34). வீட்டு வேலைக்கு சென்று வருகிறார்.

இவர்களது மகள் சிவரஞ்சனி (17), மகன் சந்தோஷ் (15). மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாக்யராஜூக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்து வந்ததாக தெரிகிறது. வேலைக்கு செல்லாமல் இருந்த கணவரிடம் பூங்கொடி உடல் நலம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி குடிப்பழக்கத்தை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

நேற்று வழக்கம்போல் பூங்கொடி வேலைக்கு சென்றார். மகள், மகன் பள்ளிக்கு சென்றனர். வீட்டில் தனியே இருந்த பாக்யராஜ் குடிப்பழக்கத்தை கைவிடமுடியவில்லையே என்று விரக்தியடைந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலை முடிந்து வந்த பூங்கொடி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாக்யராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கணவரின் உடலை பார்த்து பூங்கொடி கதறி அழுதார்.

இது குறித்து தகவல் அறிந்ததும்ராமநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டு மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாக்யராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News