செய்திகள்
பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுகிறதா?- அதிகாரி விளக்கம்

Published On 2019-10-12 02:26 GMT   |   Update On 2019-10-12 02:26 GMT
பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திக்கு அந்நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சஞ்சய்குமார் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை :

சென்னை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சஞ்சய்குமார் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது உண்மையல்ல. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை புதுப்பித்து புத்துயிரூட்டும் வகையில் விருப்ப ஓய்வு, 4 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பி.எஸ்.என்.எல். சொத்து விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டம் மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இயற்கை பேரிடர் காலங்களிலும், தொலைதூர பகுதிகளிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவையாற்றி வருகிறது. வருங் காலங்களில் அவ்வாறே சேவையாற்ற உறுதி அளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News