செய்திகள்
முதலமைச்ச்ர் பழனிசாமி

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2019-10-09 10:30 GMT   |   Update On 2019-10-09 10:30 GMT
மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறை பயணமாக நாளை மறுநாள் (11-ம் தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வருகை தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு தர வேண்டும். பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

பல்லவ நாட்டின் துறைமுகமாக இருந்த மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பொருத்தமாக இருக்கும். இருநாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு தமிழகத்தை தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாச்சார தொடர்பு இருந்து வந்தது. இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதால் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News