செய்திகள்
வானிலை நிலவரம்.

கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-10-02 14:25 GMT   |   Update On 2019-10-02 14:25 GMT
கோவை, சேலம் உட்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, சேலம், திண்டுக்கல், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சின்னக்கல்லார் பகுதியில் 5 செ.மீ மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
Tags:    

Similar News