செய்திகள்
கோப்பு படம்

வில்லியனூரில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பொதுமக்கள் பாராட்டு

Published On 2019-09-30 14:06 GMT   |   Update On 2019-09-30 14:06 GMT
வில்லியனூரில் போக்குவரத்துக்கு இடையூறு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வில்லியனூர்:

வில்லியனூரில் 4 மாட வீதிகள் மற்றும் கடைகள் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வில்லியனூர் செம்பிபாளையம் மற்றும் வருவாய்துறை சார்பில் வில்லியனூர் 4 மாட வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. ஆக்ரமிப்பு அகற்றத்துக்கு வியாபாரிகளும், இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சேதத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.

எனினும் வில்லியனூர் பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்று வில்லியனூர்- விழுப்புரம் சாலையில் கோட்டைமேடு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடந்தது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றத்தினால் வில்லியனூர் 4 மாட வீதிகள் தற்போது விசாலமான காட்சி அளிக்கிறது.
Tags:    

Similar News