செய்திகள்
அன்பழகன்.

வாலிபரை வெட்டி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Published On 2019-09-27 14:56 GMT   |   Update On 2019-09-27 14:56 GMT
முன்விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீரப்பு கூறினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே உள்ள தாயம்மாபுதூரை சேர்ந்தவர் அன்பழகன்(34). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(28). அன்பழகன் சிறிய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். அவர் குறித்து ஜெய்சங்கர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறி, அன்பழகன் அவரிடம் தகராறு செய்து வந்தார். இதன் காரணமாக அன்பழகன் - ஜெய்சங்கர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெய்சங்கரை அன்பழகன் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இந்த கொலை குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்தனர். 

இந்த கொலை வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட அன்பழகனுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜர்ஆகி வாதாடினார். இதைத் தொடர்ந்து அன்பழகனை போலீசார் கைது செய்து, வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 
Tags:    

Similar News