செய்திகள்
கோப்பு படம்

பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி - தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்கு

Published On 2019-09-16 12:24 GMT   |   Update On 2019-09-16 12:24 GMT
கோவை அருகே பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை:

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட்-அவுட்டுகளை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

கோவையில் கடந்த 2 நாட்களில் 1609 பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 88 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 72 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோவையில் நேற்று வெரைட்டி ஹால் ரோடு, ரேஸ்கோர்ஸ், ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர், பீளமேடு ஆகிய பகுதியில் பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த 11 பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.இதில் 4 பேனர் தி.மு.க.வினர் வைத்தது ஆகும்.

பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக தி.மு.க.வினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பொது இடங்களில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர், சுவரொட்டி ஒட்டியதாக 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News