செய்திகள்
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

கபிஸ்தலம் அருகே தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-12 11:36 GMT   |   Update On 2019-09-12 11:36 GMT
கபிஸ்தலம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையில் கடந்த 4 வருடமாக விவசாயிகளிடம் இருந்து கரும்புகள் வெட்டியதில் நிலுவைத் தொகையில் இருந்து வந்தது. இதனை தர கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டம் நடத்தினர்.

இதனை தொடர்ந்து ஆலையில் விவசாயிகளிடம் வெட்டப்படும் கரும்பின் அளவை படிப்படியாக ஆலை நிர்வாகம் குறைந்து கொண்டு கடந்த ஆண்டு ஆலை இயக்கப்படவே இல்லை. மேலும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு பலமாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இதனை வழங்க வேண்டும் என ஆலைத் தொழிலாளர்கள் பல கட்ட போராட்டம் நடத்தினர். மேலும் கடந்த மாதம் இந்த ஆலையில் மொத்தமுள்ள 287 பணியாளர்களில் 11 பணியாளர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் என நிர்வாகம் தெரிவித்தது.

மீதம் உள்ள தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என கோரி கடந்த மாதம் ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆலை நிர்வாகம் ஒரு வாரத்திற்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என கூறியதால் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. ஆனால் நிர்வாக தரப்பில் இதுவரை எந்த தொழிலாளரையும் பணிக்கு அழைக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று மாலை ஆலை முன்பு, நே‌ஷனல் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்க தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி சங்க நிர்வாகிகள் ஜெகதீசன், சத்தியமூர்த்தி, மகாலிங்கம், செங்குட்டுவன், ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மாநில சர்க்கரை ஆலைகள் சம்மேளன தலைவர் இளவரி, மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், சிவில் சப்ளை கார்ப்பரே‌ஷனில் மாநில துணை பொது செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். முடிவில் சங்க பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News