செய்திகள்
மதுரை கலெக்டர் அலுவலகம் கிராம மக்கள் முற்றுகை

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 100 நாள் வேலை தரக்கோரி கிராம மக்கள் முற்றுகை

Published On 2019-09-09 09:56 GMT   |   Update On 2019-09-09 09:56 GMT
100 நாள் வேலை தரக்கோர மதுரை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குறவக்குடி கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் மூலம் வேலை வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 1½ வருடமாக குறவக்குடி கிராம மக்களுக்கு 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் வேலை கொடுக்கவில்லை. சில நாட்களுக்கு வேலை கொடுத்தாலும் அதற்கான சம்பளமும் தரவில்லை என புகார் எழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு வேலை தேடி வெளியிடங்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது.

இன்று குறவக்குடி பகுதியைச்சேர்ந்த ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து எங்கள் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை கிடைக்க வழிவகை செய்யுமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத் தனர்.

Tags:    

Similar News