செய்திகள்
செல்போன் டவரில் ஏறி தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல்

தொழிலாளர்கள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

Published On 2019-08-19 09:18 GMT   |   Update On 2019-08-19 09:18 GMT
பணி நீக்கத்தை திரும்ப பெறக்கோரி4 தொழிலாளர்கள் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் தனியார் இரும்பு உருக்காலை உள்ளது.

இங்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றை வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர்.

தொழிலாளர்கள் அனைவரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று தொழிலாளர்களில் 4 பேர் அங்குள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று பணி நீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்களை கீழே இறங்கி வருமாறு கும்மிடிப்பூண்டி போலீஸ் டி.எஸ்.பி.யும், கவரப்பேட்டை காவல்துறையினரும், பொன்னேரி வட்டாட்சியர் வில்சனும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News