செய்திகள்
அரூர் அடுத்த வடுகப்பட்டியில் டிராக்டர் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இன்றி தவிக்கும் அரூர் பகுதி மக்கள்

Published On 2019-08-15 12:55 GMT   |   Update On 2019-08-15 15:35 GMT
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.
அரூர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி அரூர் மற்றும் சுற்றுபுற கிராம பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றி லும் வறண்டு விட்டது. இதனால் போர்வெல் குழாய்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்டு வந்த ஒகேனக்கல் குடிநீரை முழுவதும் நம்பி மக்கள் இருந்தனர். 

இந்நிலையில் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் தண்ணீருக்கு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். 

சில ஊராட்சிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்கின்றனர். அரூர் பகுதியில் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். காவிரியில் கரைபுரண்டு ஓடியும் குடிநீர் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News