செய்திகள்
தீவிபத்து

கீழ மணக்குடியில் மீனவர் ஓய்வு கூடத்தில் பயங்கர தீ விபத்து

Published On 2019-08-15 09:40 GMT   |   Update On 2019-08-15 09:40 GMT
கீழ மணக்குடியில் மீனவர் ஓய்வு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வலைகள் எரிந்து நாசமானது.
தென்தாமரைகுளம்:

தென்தாமரை குளம் அருகே கீழ மணக்குடியில் மீனவர் ஓய்வு கூடமும், வலைக்கூடமும் உள்ளது.

இந்த வலை கூடத்தில் மீனவர்கள் ஓய்வு எடுப்பது வழக்கம். மேலும் இங்கு மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அவர்களின் விலை உயர்ந்த வலைகளும் இங்கு பராமரிக்கப்பட்டு வருவது வழக்கம்.

கடலுக்கு செல்லாத நாட்களில் மீனவர்கள் இங்கு வைக்கப்பட்டுள்ள வலைகளை பிரித்து பழுது பார்ப்பார்கள்.

மீனவர் ஓய்வு கூடத்தில் கீழ மணக்குடியை சேர்ந்த வாட்சன் (வயது 32), ரூபன் (38), மோகன் ராஜ் (41) ஆகியோருக்கு சொந்தமான மீன்பிடி வலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இன்று கடலுக்கு செல்லாததால் இந்த வலைகள் அங்கேயே இருந்தது. இன்று அதிகாலை 6 மணி அளவில் மீனவர் ஓய்வு கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மீனவர் ஓய்வு கூடத்தில் பிடித்த தீ காற்று பலமாக வீசியதால் அங்கிருந்த வலைகளிலும் பரவியது. இதில் அங்கிருந்த விலை உயர்ந்த நைலான் வலைகள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. இதன் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பற்றி மீனவர்கள் தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கென்னடி சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தி வருகிறார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீ விபத்து பற்றி தெரிந்ததும் ஏராளமான மீனவர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News