செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

கொட்டாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2019-08-14 10:19 GMT   |   Update On 2019-08-14 10:19 GMT
கொட்டாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மேலூர்:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள கம்பூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில வருடங்களாகவே குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.

இதனால் இந்தப்பகுதி மக்கள் பல கி.மீ. தூரம் சென்று குடிநீரை எடுத்து வரும் அவலநிலை உள்ளது.

மழை பெய்தாலும், சுகாதாரமான குடிநீர் கிடைக் காததால் இந்தப்பகுதியில் அடிக்கடி பலர் காய்ச்சலால் பாதிக்கப் படுவதுண்டு.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி அதிகாரி களிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை கண்டித்து இன்று காலை அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் கருங்காலக்குடி-நத்தம் சாலையில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரி களுக்கு எதிராக கோ‌ஷமிட் டனர். மறியல் குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் ம மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News