செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து சீறிப்பாயும் தண்ணீர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்- தமிழக அரசுக்கு ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2019-08-13 09:17 GMT   |   Update On 2019-08-13 09:17 GMT
தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

“மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும். தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூருக்கு வரும் நீரின் அளவு நாளை ஒரு லட்சம் கன அடியாக குறையும்” எனவும் ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News