செய்திகள்
காதல் ஜோடி

திருப்பரங்குன்றம் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2019-07-27 11:23 GMT   |   Update On 2019-07-27 11:23 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருப்பரங்குன்றம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

திருப்பரங்குன்றம்:

திருவள்ளூர் மாவட்ட தெற்கு தொகுதி தி.மு.க. துணைச் செயலாளர் காயத்திரி ஸ்ரீராம். இவரது மகள் நிதர்சனா. சென்னை பூந்தமல்லி ஸ்ரீவித்யா கணபதி தெருவைச் சேர்ந்தவர் மைக் ரிச்சர்ட்சன். இருவரும் காதலித்து வந்தனர்.

நிதர்சனாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நிதர்சனா தனது காதல் கணவருடன் மதுரை வந்தார். மதுரை வந்து நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை நிதர்சனா-மைக் ரிச்சர்ட்சன் இருவரும் திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.

காதல் திருமணம் செய்த எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

இதற்கிடையே நிதர்சனாவை காணவில்லை என்று அவரது தாயார் பூந்தமல்லி போலீசில் புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே பூந்தமல்லி போலீசார் திருப்பரங்குன்றம் வந்துள்ளனர்.

சென்னை சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து. எனவே போலீசாருடன் செல்ல மாட்டோம் என்று காதல் ஜோடியினர் மறுப்பு தெரிவித்தனர்.

Tags:    

Similar News