search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple asylum"

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். மளிகைக்கடைக்காரர். இவரது மகன் தனசேகரன் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பருடைய மகள் ஜனனி (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஜனனி அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்ஸ் பெக்டர் ரவிச் சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் சின்னசாமி, ஆனந்தன் ஆகியோர் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு போலீசார், ஜனனியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

    ஆம்பூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை புதுதெருவை சேர்ந்தவர் பழனி மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவரும் கம்பிக்கொள்ளை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஜெயசூர்யா என்பவரும் கடந்த 2ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 2 பேர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    கடந்த 31-ந் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பேரணாம்பட்டில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சுரண்டை:

    சுரண்டை அருகில் உள்ள வீராணத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகள் சங்கீதா (வயது 20). இவரை காணவில்லை என கிருஷ்ணன் வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 16-ந் தேதி புகார் கொடுத்தார். 

    இந்நிலையில் நேற்று வீ.கே.புதூர் போலீஸ் நிலையத்தில் சங்கீதா, மதுரை ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருடன் மணக்கோலத்தில் தஞ்சமடைந்தார். அப்போது சங்கீதா ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் போது ஆலங்குளத்தில் இருந்து கல்லூரிக்கு பாலகிருஷ்ணன் ஆட்டோவில் செல்லும் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இதையடுத்து மதுரை அழகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறினர்.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் சத்யவேந்தன், சங்கீதாவின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசினார். ஆனால் திருமணத்தை ஏற்க சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர். பெண்ணுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர். இருவருக்கும் திருமண வயதை தாண்டியதால் சங்கீதாவை, அவரது கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    கண்ணமங்கலம் அருகே பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே விளாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகள் ராஜப்பிரியா (வயது 19). இவர் கட்டிப்பூண்டி கிராமத்தில் உள்ள பாட்டி சின்னபொண்ணு வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற ராஜப்பிரியா திடீரென மாயமானார். 

    இதுகுறித்து சேட்டு சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராஜப்பிரியா தனது காதல் கணவர் ராஜ்குமார் (26) என்பவருடன் சந்தவாசல் போலீசில் தஞ்சம் அடைந்தார். அப்போது ராஜப்பிரியா போலீசில், நாங்கள் 2 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், நாங்கள் இருவரும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் தனது கணவருடன் செல்வதாக கூறினார். 

    இதையடுத்து போலீசார் ராஜப்பிரியாவை ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 23). திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நவகோம்பு பகுதியை சேர்ந்தவர் அபிநயா (22).

    இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்தனர்.

    இவர்களின் காதல் இருவரின் வீட்டுக்கு தெரியவந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதையடுத்து பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் தந்தை பெரியார் திடாவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் முன்னிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து காதல் ஜோடி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 

    பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    தருமபுரி:

    சேலம் மாவட்டம்  ஒமலூர் அடுத்துள்ள தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது21), கல்லூரி படிப்பு முடித்துவிட்டு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் தேன்மொழி (20). கல்லூரி இறுதி ஆண்டு படித்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் மணிகண்டனுக்கும் தேன்மொழிக்கும் இடையே பழக்கும் ஏற்பட்டது. 

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மணிகண்டனும் தேன்மொழியும் தருமபுரிக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். 

    இது குறித்து தேன்மொழியின் வீட்டார் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த தகவல் மணிகண்டன் மற்றும் தேன்மொழிக்கு தெரியவர தருமபுரி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் அடைந்தனர். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள காரணி பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 20). இவர் தனது காதல் கணவருடன் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இன்று மதியம் மனு கொடுக்க வந்தார்.

    போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுக்க வைத்திருந்த  மனுவில் ரம்யா கூறியிருப்பதாவது:-

    நான் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்தேன். அதே கம்பெனியில் கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (21) என்பவரும் வேலைபார்த்து வந்தார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதை அறிந்த எனது பெற்றோர் எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். 

    இதைத்தொடர்ந்து நானும் எனது காதலர் ராமச்சந்திரனும் பரங்கிப்பேட்டையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இதனால் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    தஞ்சையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தாராசுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவரும், பாபநாசம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சரண்யா (29) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போதே கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் சுரேசும், சரண்யாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    இதனால் நேற்றுமுன் தினம் சரண்யா தனது வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் காதலன் சுரேசுடன் தஞ்சையில் பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட சுரேஷ், தனது காதல் மனைவி சரண்யாவுடன் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது தங்களது காதலுக்கு சரண்யா பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

    இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தினார். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலியுடன் கூலித் தொழிலாளி தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த கண்ணன் மகன் சரத்குமார் (வயது 23). சந்தைப் பேட்டையில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினசரி அய்யலூரில் இருந்து வையம்பட்டி சந்தைக்கு வேனில் செல்வது வழக்கம்.

    அப்போது வைரம் பட்டியைச் சேர்ந்த யாஸ்மின் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பெண் வீட்டார் அச்சுறுத்தல் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என எடுத்து கூறி அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு மெக்கானிக் காதலியுடன் தஞ்சமடைந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூரைச் சேர்ந்தவர் சித்தன் மகன் வேலுமணி (வயது 24). கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பட்டிமட்டம் பகுதியில் சிறுவயதிலேயே குடிபெயர்ந்தார். மேலும் அப்பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த மீனு (19). பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இருவருக்கு மிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பல்வேறு பகுதிகளில் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இதற்கு மீனு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

    அவரது பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணிய காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை அருகே பாடியூரில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    இதனிடையே மகளை காணவில்லை என கேரள போலீசில் மீனுவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மீனு மற்றும் வேலுமணி மேஜர் என்பதால் விருப்பப்படி செல்லலாம். இருந்தபோதும் கேரள போலீசில் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தாராபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராரபுரத்தை அடுத்த அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் கடந்த 10 வருடமாக திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் லதா என்கிற மகேஸ்வரி (24). என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் மகேஸ்வரியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையறிந்த தேவராஜ் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் தனலட்சுமி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் தேவராஜ்-மகேஸ்வரியின் திருமணத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். மேலும் அவர்களுக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறி விட்டு சென்றனர்.

    பின்னர் காதல் ஜோடி திருப்பூரில் நண்பர்கள் உதவியுடன் வாடகை வீட்டில் குடியேறினர்.

    காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூரை அடுத்த தாழம்பூர் நத்தம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் ஜெயந்தி (வயது 27). எம்.காம் பட்டதாரி. இவரும் நாவலூர் கிராமத்தை சேர்ந்த கல்யாணக்குமார் என்பவரின் மகன் கண்ணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஜெயந்தி, தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதாக பாதுகாப்பு வேண்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

    நானும், கண்ணனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம்.

    திருமணம் செய்து கொண்டு எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன். நாங்கள் திருமணம் செய்தது எனது வீட்டில் தெரியாது. பின்னர் இதை தெரிந்து கொண்ட எனது தந்தை கமலக்கண்ணன், தாய் மீரா மற்றும் உறவினர்கள் கடந்த ஒரு மாதமாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். நேற்று முன்தினம் நான் எனது வீட்டில் இருந்து வெளியேறி எனது கணவர் கண்ணன் வீட்டுக்கு வந்து விட்டேன்.

    இதை தெரிந்து கொண்ட எனது குடும்பத்தினர் அடியாட்களுடன் எனது கணவரின் வீட்டை அடித்து நொறுக்கி அவரது உறவினர்களையும் அடித்து மிரட்டி வருகின்றனர்.

    எனது கணவருடன் வாழவே நான் விரும்புகிறேன். ஆகவே எனது பெற்றோர், உறவினர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
    ×