என் மலர்

  செய்திகள்

  காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
  X

  காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பட்டதாரி பெண் காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
  காஞ்சீபுரம்:

  காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூரை அடுத்த தாழம்பூர் நத்தம் கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் ஜெயந்தி (வயது 27). எம்.காம் பட்டதாரி. இவரும் நாவலூர் கிராமத்தை சேர்ந்த கல்யாணக்குமார் என்பவரின் மகன் கண்ணன் என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

  இந்த நிலையில் ஜெயந்தி, தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுவதாக பாதுகாப்பு வேண்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்தார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

  நானும், கண்ணனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி சென்னை சைதாப்பேட்டை கடும்பாடி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு சைதாப்பேட்டை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டோம்.

  திருமணம் செய்து கொண்டு எனது தாய் வீட்டில் வசித்து வந்தேன். நாங்கள் திருமணம் செய்தது எனது வீட்டில் தெரியாது. பின்னர் இதை தெரிந்து கொண்ட எனது தந்தை கமலக்கண்ணன், தாய் மீரா மற்றும் உறவினர்கள் கடந்த ஒரு மாதமாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். நேற்று முன்தினம் நான் எனது வீட்டில் இருந்து வெளியேறி எனது கணவர் கண்ணன் வீட்டுக்கு வந்து விட்டேன்.

  இதை தெரிந்து கொண்ட எனது குடும்பத்தினர் அடியாட்களுடன் எனது கணவரின் வீட்டை அடித்து நொறுக்கி அவரது உறவினர்களையும் அடித்து மிரட்டி வருகின்றனர்.

  எனது கணவருடன் வாழவே நான் விரும்புகிறேன். ஆகவே எனது பெற்றோர், உறவினர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
  Next Story
  ×