செய்திகள்
விசாரணை

அருப்புக்கோட்டையில் பேராசிரியையை காரில் கடத்த முயற்சி- வாலிபரிடம் விசாரணை

Published On 2019-07-26 12:15 GMT   |   Update On 2019-07-26 12:15 GMT
பஸ் நிலையத்தில் பேராசிரியையை காரில் கடத்த முயன்ற வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார் அந்த பெண் முன்பு நின்றது. காரில் இருந்து இறங்கிய வாலிபர் திடீரென்று பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றார். அந்த பெண் கூக்குரலிட்டார்.

இதை பார்த்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டு, வாலிபரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் பால முருகன் மற்றும் போலீசார் அங்கு வந்து இளம்பெண்ணையும், வாலிபரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் நரிக்குடி, வீரசோழன் அருகே உள்ள கோரப் பள்ளத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பதும் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இவரை கடத்த முயன்றது திருச்சுழி பகுதியை சேர்ந்த பிச்சை ஆவார். இவர் அந்த பெண்ணின் உறவுக்காரர். காதல் பிரச்சினையில் பிச்சை, பேராசிரியை கடத்த முயன்றுள்ளார்.

இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News