செய்திகள்
வழக்கு

திருவாடானையில் நிலம் மோசடி வழக்கில் 6 பேர் மீது வழக்கு

Published On 2019-07-24 11:51 GMT   |   Update On 2019-07-24 11:51 GMT
நிலத்தை விற்பதாக கூறி ரூ.25 லட்சம் பெற்றுக் கொண்டு அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்க முயன்றது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்:

திருவாடானையை சேர்ந்த முகமது ஹாசன் மனைவி செல்வராணி என்ற கிலாபானுவுக்கு 1 ஏக்கர் 85 சென்ட் நிலம் ராமநாதபுரம் அருகே உள்ளது.

இதில் 85 சென்ட் நிலத்தை ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது57) என்பவருக்கு விற்பனை செய்ய ரூ.1 கோடியே 40 ஆயிரத்துக்கு விலை பேசி முடித்து ஐந்து தவணையில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் பணம் பெற்று விற்பனை ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் அதனை மீறி ‘கிலா பானு, ராமநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராஜசுந்தரம், மனைவி ராமலட்சுமி, இளமாறவழுதி ஆகியோருடன் சேர்ந்து ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்த செந்தில் அதிபன், அவரது மனைவி கல்யாணி, சுதாகர் மனைவி நித்யா ஆகியோருக்கு விற்பனை செய்துள்ளார்.

விற்பனை ஒப்பந்தம் செய்து ரூ.25 லட்சம் பெற்றுக்கொண்டு, வேறு நபர்களுக்கு நிலம் விற்பனை செய்துள்ளதாக ராமநாதபுரம் முதலாவது ஜே.எம்.,கோர்ட்டில் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி நில அபகரிப்பு தடுப்பு பிரிவினர் விசாரிக்க உத்தரவிட்டார்.

அதன் பேரில் செல்வராணி என்ற ‘கிலாபானு, ராமநாதபுரத்தை சேர்ந்த ராமலட்சுமி, இளமாறவழுதி, கல்யாணி, செந்தில், நித்யா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News