search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில மோசடி"

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ஆனந்தாநகரை சேர்ந்தவர் தீபக் தாமஸ். இவரது மனைவி அனுமோல் (வயது34). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரிடம் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரராக பணிபுரியும் சணில்குமார்(41) மற்றும் இவரது அண்ணன் சுகேஷ் (43) ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை அருகே மொரட்டாண்டியில் குறைந்த விலையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறினர்.

    இதனை நம்பி அனுமோல் வீட்டுமனை வாங்க சணில்குமார் மற்றும் சுகேஷிடம் முன் பணம் கொடுத்தார்.

    இதுபோல் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியர்கள், நர்சுகள் 17 பேர் வீட்டுமனை வாங்க ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சணில்குமார் மற்றும் சுகேஷிடம் ரூ.40 லட்சம் முன்பணம் கொடுத்தனர்.

    ஆனால் அவர்கள் வீட்டுமனை வாங்கிதர வில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்ட போது பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜிப்மர் ஊழியர்கள் இதுபற்றி கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தி ஐ.ஆர்.பி.என். போலீசார் சணில்குமார் மற்றும் அவரது சகோதரர் சுகேஷ் ஆகிய இருவர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    சென்னை பெரம்பூர், சுப்பிரமணி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 65), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர்களின் குடும்ப சொத்தான 6.67 ஏக்கர் நிலம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பேராவூர் பகுதியில் உள்ளது. இந்த சொத்தில் பொன்னுசாமிக்கு, இவரது அண்ணன் பேராவூரை சேர்ந்த சுப்ரமணி (72) பங்கு வழங்கவில்லை. இதுகுறித்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பொன்னுச்சாமிக்கு உரிய பங்கை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் உரிய பங்கை வழங்காமல் சுப்பிரமணி ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பொன்னுசாமி புகார் அளித்தார். எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பெரில் விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சுப்பிரமணி தம்பிக்கு வழங்க வேண்டிய பாகத்தை முறைகேடாக அவரது மகன் சத்யாவிற்கு எழுதி கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி அவரது மனைவி அன்னக்கிளி, மகன் திவாகரன், மகள்கள் சரண்யா லட்சுமி பிரபா, சத்யா ஆகிய ஆறு பேர் மீது நில மோசடி பிரி வில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரசேகர் பவன்குலே நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர்.
    • அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    மும்பை :

    முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கடந்த உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது மந்திரியாக இருந்த போது நாக்பூரில் குடிசைப்பகுதி மக்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், " முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நில மோசடியை அம்பலப்படுத்தியது பா.ஜனதா கட்சி தான். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் பவன்குலே, பிரவீன் தட்கே, நாகோ கானர் நாக்பூர் நில பரிவர்த்தனை தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதன்பிறகு தான் நாங்கள் அந்த பிரச்சினையை கையில் எடுத்தோம்.

    துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆதரவாளர்களான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டேயை அம்பலப்படுத்த விரும்பியது தெளிவாக தெரிகிறது.

    நான் பா.ஜனதா மாநில தலைவராக இருக்கும் போது தேவேந்திர பட்னாவிசை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறேன் என சந்திரசேகர் பவன்குலே கூறிய மறுநாளே நாக்பூர் நில மோசடி அம்பலமாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான நிலமோசடியை திசைத்திருப்ப திஷா சலியன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    விரைவில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யிடம் புகார் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ராஜேந்திரனிடம் விற்றனர்.
    • நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது43). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவினரான லாஸ்பேட்டை சாந்தி நகர் தி.ரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கியராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலியான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திரனிடம் விற்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் நில மோசடியில் ஈடுபட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சீதாராமன் கொரோனா தொற்றால் சமீபத்தில் இறந்துபோன நிலையில் ஆரோக்கியராஜ் மற்றும் குமரனை சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இதில் தொடர்புடையவர்களில் ஒருவரான கடலூர் தீதாம்பாளையம் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த தனியார் என்ஜீனியரிங் கல்லூரி பேராசிரியரான அபிலாஷ் ராஜீவ் தரணை அதிரடியாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையிலான போலீசார் கடலூர் சில்வர் பீச்சில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மதுரையில் போலி ஆவணம் தயாரித்து ரூ.17.80 லட்சம் நிலமோசடி செய்யப்பட்டது.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வைத்தியநாதபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பொன்னுசாமி மனைவி நவநீதம் (வயது 55). இவர் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், "நான் உறங்கான்பட்டியைச் சேர்ந்த பண்டாரி என்பவரிடம் ரூ.17.80 லட்சம் மதிப்பில் நிலம் வாங்கினேன்.

    அது வேறு ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. போலி ஆவணத்தை தயார் செய்து பண்டாரி என்னிடம் ரூ.17.80 லட்சம் நில மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×