செய்திகள்
சந்திரயான் 2 - சென்னை மெட்ரோ வாட்டர்

நிலவில் தண்ணீர் இருந்தால்... -இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ வாட்டரின் மெசேஜ்

Published On 2019-07-23 06:19 GMT   |   Update On 2019-07-23 06:35 GMT
இந்தியாவால் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்திற்கு சென்னை மெட்ரோ நகைச்சுவையாக மெசேஜ் ஒன்றை பதிவிட்டுள்ளது.
சென்னை:

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள், திரை துறையினர், விளையாட்டு வீரர்கள், பொது மக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை மெட்ரோ வாட்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. இதில், 'சந்திராயன் 2வினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காக இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்.



நாங்கள் புதியதாக நீர்நிலைகளை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஒருவேளை, நிலவில் தண்ணீர் இருந்தால், முதலில் யாருக்கு அதனை தெரிவிக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்தானே?' என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.

இந்த டுவிட்டிற்கு நெட்டிசன்கள் சென்னை மெட்ரோவை விமர்சிக்கும் வகையில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'உங்கள் நகைச்சுவை திறன் பாராட்டுக்குரியதுதான். எனினும், நீர்நிலைகளை பாதுகாக்க முதலில் நடவடிக்கை எடுங்கள்' என கமெண்ட் அடித்துள்ளார்.

Tags:    

Similar News