செய்திகள்
முருங்கைக்காய்

வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதியாகும் ஒட்டன்சத்திரம் முருங்கைக்காய்

Published On 2019-07-17 12:00 GMT   |   Update On 2019-07-17 12:00 GMT
ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் முருங்கைகாய் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சுற்றியுள்ள அம்பிளிக்கை, விருப்பாச்சி, அரசபிள்ளைபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கைகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதியில் விளையும் முருங்கைக்காய் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த முருங்கையை குஜராத், ஒரிசா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்திற்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வருகின்றனர். தற்போது வட மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் அங்கு பயிரிட்ட முருங்கைக்காய்கள் சேதம் அடைந்துள்ளதால் இங்கு இருந்து முருங்கைகாய் அனுப்பி வைக்கப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்திற்கு முருங்கைகாய் ஏற்றுமதி செய்யப்படுவதால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ கரும்பு மற்றும் செடிமுருங்கை ரூ.48, மரமுருங்கை ரூ.38க்கு விற்பனையானது.

மற்ற காய்கறிகளின் விலை நிலவரம், தக்காளி பெட்டி 550 வெண்டைக்காய் ரூ.17, சுரைக்காய் ரூ.5, கல்லாமை மாங்காய் ரூ.30 முதல் 32 வரையும், செந்தூரம் ரூ.22 நீலம் மற்றும் நாடு ரூ.15 முதல் 19 வரை டிஸ்கோ கத்திரிக்காய் ரூ.250 புடலங்காய் ரூ.10 பீன்ஸ் ரூ.35க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News