search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒட்டன்சத்திரம் மார்க்கெட்"

    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

    ஒட்டன்சத்திரம்:

    கேரளாவில் பிரசித்திபெற்ற ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    கேரளாவிற்கு அதிகளவு காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படுவது வழக்கம். மார்க்கெட்டில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் நிலையில் இன்று ஓணம் பண்டிகைக்காக மார்க்கெட் செயல்பட்டது.

    இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து காய்கறிகள் அதிகளவு கொண்டுவரப்பட்டன. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்தபோதும் அதிகளவு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

    இன்று ஒரேநாளில் மட்டும் ரூ.5 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. வழக்கமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து 70 லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும். இன்று 300 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டது.

    சேம்பைகிழங்கு கிலோ ரூ.25, பீட்ரூட் ரூ.10, கத்தரிக்காய் ரூ.15 முதல் ரூ.20, புடலங்காய் ரூ.12, வெண்டை ரூ.20, பாகற்காய் ரூ.18, சுரக்காய் ரூ.7 முதல் ரூ.15, பூசணிக்காய் ரூ.7, அவரை ரூ.35 முதல் ரூ.55, கொத்தவரை ரூ.18, மரமுருங்கை ரூ.9, கரும்பு முருங்கை ரூ.10, பச்சை மிளகாய் ரூ.32, பல்லாரி ரூ.18, சின்னவெங்காயம் ரூ.35 முதல் ரூ.50, தக்காளி ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.500 என கொள்முதல் செய்யப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக தக்காளி ஒரு பெட்டி ரூ.300 வரையிலேயே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இன்று தேவை அதிகரிப்பின் காரணமாக ரூ.500 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்வேறு மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் விடுமுறை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் அதிகளவு காய்கறிகளை கொண்டு வந்தனர்.

    • கேரளாவில் போராட்டம் நடக்கும்போது, வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வர மாட்டார்கள்.
    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து 70 சதவீதம் காய்கறிகள் கேரளாவில் உள்ள மாவட்டங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

    கேரளாவில் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வழக்கமாக கேரளாவில் போராட்டம் நடக்கும்போது, வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வர மாட்டார்கள்.

    ஸ்டிரைக் அறிவிப்பு நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே காய்கறிகளை வாங்க வந்த வியாபாரிகளும், நிறுத்தி விட்டனர். ஆனால் அதற்குள் பெரும்பாலான விவசாயிகள் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு வந்து விட்டனர்.

    இதனால் அவை விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலையும் பாதியாக குறைந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.7க்கு விற்கப்பட்டது. ரூ.25க்கு விற்ற பச்சை பயிறு ரூ.7க்கு விற்கப்பட்டது. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    இதன் காரணமாக ரூ.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாளை காந்தி மார்க்கெட் விடுமுறை என்பதால் காய்கறிகள் மேலும் தேக்கமடைந்துள்ளது.

    • ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி வந்தார்.
    • மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யும் வசதி ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது.

    திண்டுக்கல்:

    ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இது, தென்னிந்தியாவின் 2-வது பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தினமும் சுமார் 1,000 டன்னுக்கு மேல் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த காய்கறிகள் தமிழகம் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்து வருகிறது.

    நவீன வசதிகளுடன், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி வந்தார். இதற்கான முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். இதன் எதிரொலியாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், ரூ.29 கோடி செலவில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் நவீன மயமாக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் மார்க்கெட் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது. அதில் வியாபாரிகளுக்கு கடைகள், உணவகம், போக்குவரத்திற்கு இடையூறு இன்றி வாகனங்கள் உள்ளே, வெளியே செல்வதற்கு தனி வழி, வாகனம் நிறுத்துமிடம், வங்கி சேவை, ஏ.டி.எம். மையம், போலீஸ் உதவி மையம், நிழற்குடை, குடிநீர், மழை நீர்வடிகால், கழிப்பறைகள், வெளியூரில் இருந்து வரும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு தங்கும் விடுதிகள், தடையில்லா மின்சாரம், கண்காணிப்பு கேமரா, அன்றாட சேகரமாகும் மார்க்கெட் குப்பைகளை நவீன எந்திரங்கள் மூலம் தினமும் சுத்தம் செய்யும் வசதி ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, மூலச்சத்திரம், கேதையெறும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்னவெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

    மேலும் தாராபுரம் பகுதியில் அதிக அளவு சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெங்காயங்கள் ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அதிகம் அனுப்பி வந்தனர். ஆனால் தற்போது கேரள வியாபாரிகள் கர்நாடக மாநிலம் மைசூர் வெங்காயத்தை அதிகம் விரும்புவதால் ஒட்டன்சத்திரத்தில் ஏற்றுமதி குறைந்துள்ளது.

    மேலும் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. தினசரி 3 ஆயிரம் பைகளுக்கு மேல் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. ஆனால் அதற்கான ஏற்றுமதி இல்லை. மேலும் வியாபாரிகளும் விலை குறைத்தே கேட்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு கிலோ ரூ.5-க்கு மட்டுமே விலை கேட்கின்றனர். சாகுபடி செலவு மற்றும் அதனை மார்க்கெட்டுக்கு கொண்டு வருவது என விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    ஆனால் பறிப்பு கூலிக்குகூட விலை கிடைப்பதில்லை. இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் வெங்காயங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல ஆர்வமின்றி காணப்படுகின்றனர்.

    ×