search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கேரளாவில் பந்த் அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தேக்கமடைந்துள்ள காய்கறிகள்

    கேரளாவில் பந்த் அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம்

    • கேரளாவில் போராட்டம் நடக்கும்போது, வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வர மாட்டார்கள்.
    • பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து 70 சதவீதம் காய்கறிகள் கேரளாவில் உள்ள மாவட்டங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

    கேரளாவில் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வழக்கமாக கேரளாவில் போராட்டம் நடக்கும்போது, வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வர மாட்டார்கள்.

    ஸ்டிரைக் அறிவிப்பு நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே காய்கறிகளை வாங்க வந்த வியாபாரிகளும், நிறுத்தி விட்டனர். ஆனால் அதற்குள் பெரும்பாலான விவசாயிகள் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டு வந்து விட்டனர்.

    இதனால் அவை விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலையும் பாதியாக குறைந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.15க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.7க்கு விற்கப்பட்டது. ரூ.25க்கு விற்ற பச்சை பயிறு ரூ.7க்கு விற்கப்பட்டது. பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    இதன் காரணமாக ரூ.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாளை காந்தி மார்க்கெட் விடுமுறை என்பதால் காய்கறிகள் மேலும் தேக்கமடைந்துள்ளது.

    Next Story
    ×