search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் நாளை முழு அடைப்பு - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.4 கோடி காய்கறிகள் தேக்கம்
    X

    கேரளாவில் நாளை முழு அடைப்பு - ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.4 கோடி காய்கறிகள் தேக்கம்

    கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ஒட்டன்சத்திரம் சந்தையில் ரூ.4 கோடி அளவில் காய்கறிகள் தேக்கமடைந்தன. #Vegetables

    ஒட்டன்சத்திரம்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் நாளை பல்வேறு தொழிற்சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் இருந்து தினசரி 100-க்கும மேற்பட்ட லாரிகளில் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ஒட்டன்சத்திரம் சந்தையில் இருந்து மட்டும் 50 முதல் 60 சதவீதம் காய்கறிகள் கேரளாவுக்கு மட்டுமே செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    முழு அடைப்பு போராட்டம் காரணமாக நேற்றே விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் தினசரி சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கேரளாவுக்கு அனுப்ப உள்ள காய்கறிகள் தேக்கமடைந்துள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாட்கள் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் நேற்று முதலே காய்கறிகளை கொண்டு வராததாலும், லாரிகளும் வராததாலும் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    வெளியூர்களுக்கு அனுப்ப காய்கறிகள் தயாராக இருந்த போதும் தொழிலாளர்கள் வரவில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் களை இழந்து காணப்பட்டது. #Vegetables

    Next Story
    ×