செய்திகள்
வீட்டில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன.

மரக்காணம் அருகே கோஷ்டி மோதல்- 6 வீடுகள் சூறை

Published On 2019-07-07 17:17 GMT   |   Update On 2019-07-07 17:17 GMT
மரக்காணம் அருகே கோஷ்டி மோதலில் 6 வீடுகள் சூறையாடப்பட்டன. 4 பேர் படுகாயம் அடைந்தனர். அசம்பாவிதம் நடைபெறால் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ளது கைப்பானிகுப்பம். மீனவர் பகுதி ஆகும். இங்கு முன்னாள் மீனவர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் ஏழுமலை. இவரது ஆதரவாளர்களுக்கும், தற்போது மீனவர் கிராம பஞ்சாயத்து தலைவராக உள்ள மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென்று அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்தவர்களும் அடிதடி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 6 வீடுகள் சூறையாடபட்டன. அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

வீடுகளில் இருந்த குளிர்சாதனப் பொருட்கள், ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டன, மோட்டார் சைக்கிள்கள், பைபர் போட் என்ஜின்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன. இந்த கோஷ்டி மோதலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.

இந்த மோதலில் ஏழுமலை மற்றும் அவரது ஆதரவாளர்களான தனசேகர், சங்கர், பழனி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரனை நடத்தினர். அங்கு அசம்பாவிதம் நடைபெறால் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News